
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு கடந்த சில நாட்களை விட இன்று சிறப்பான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். படிப்பில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். குடும்ப சூழ்நிலை அமைதி அதிகரிக்கும். பணியிடத்தில் எதிரிகளை எளிதாக கையாள்வீர்கள். பெற்றோருக்கு சேவை செய்ய நினைப்பீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளில் பெரும்பகுதி மற்றவர்களின் வேலையை முடிப்பதில் செலவிடுவீர்கள். இன்று உங்கள் பணிகளை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவோம். நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று ஆன்மீகம், சமூகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான பலன்களை கிடைக்கும். சிலரிடம் சேர்ந்து செய்யக்கூடிய பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயத்தில் முழு கவனத்துடன் செய்யவும். அதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள். பிள்ளைகளின் லட்சியம் நிறைவேற்ற பணம் அதிகமாக செலவாகும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் கவலை அதிகரிக்கும். முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. அதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான லாபம் பெறலாம். இன்று உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று புதிய உயரத்தை தொடுவீர்கள். காதல் வாழ்க்கையில் சில ஏமாற்றங்கள் ஏற்படும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான பலன் கிடைக்க கூடிய நாள். குழந்தைகளின் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும். காதல் வாழ்க்கையில் தேவையற்ற மோதலை தவிர்த்து விட்டுக்கொடுத்து செல்லவும். பொய் சொல்வதை தவிர்க்கவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையை கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவுகளை அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு உதவும். பிறரின் குடும்ப விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். புதிய தொழிலை தொடங்குவதில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சொந்த தொழில், வியாபாரம் தொடர்பாக கடினமான சூழல் இருக்கும். உங்களிடம் திட்டமிடுவதால் வேலைகளை சரியாக முடிக்க முடியும். உங்கள் பேச்சில் நிதானம் கடைப்பிடிக்கவும். மூதாதையர்களின் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தேர்வில் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முடியும். இன்று விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. எந்த ஒரு பிரச்சனையும் புத்திசாலித்தனத்துடன் அணுகவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகளால் கவலை அதிகரிக்கும். இன்று உங்கள் பணத்தை சரியான முறையில் திட்டமிட்டு செயல்படவும். உங்கள் பேச்சில் இனிமையே கடைப்பிடிக்கவும். பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் நாள். தொழில் தொடர்பாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று கடன் கொடுப்பது, கடன் வாங்குவது தொடர்பாக பெற்றோரின் ஆலோசனை பெறுவது நல்லது. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக சில கவலைகள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பாக சில முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.