உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனியானது காங்கேசன்துறை வீதியூடாக சென்று, பின்னர் வைத்தியசாலை வீதியூடாக சென்று எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையை அடைந்தது. பின்னர் வைத்தியசாலையில் விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது.
குளுக்கோமா நோய் என்பது கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இந்த நோயினை ஆரம்பத்தில் இனங்காண்டு சிகிச்சையை பெற்றுக் கொள்வதன் மூலம் நோயில் இருந்து குணமடைய முடியும். எனவே இந்த நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
லயன்ஸ் கழகம் மற்றும் எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews