
*_꧁. பங்குனி: 𝟬𝟭
꧂_*
*_ சனிக்கிழமை_
*
*_ 𝟭𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
பழைய நினைவுகள் மூலம் சுகமான அனுபவங்கள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள் குறையும். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சு நிறம்.
அஸ்வினி : அனுபவங்கள் கிடைக்கும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கற்பனை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நம்பிக்கையானவர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
கிருத்திகை : முடிவுகள் கிடைக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : புரிதல்கள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள் கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். விருத்தி பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை : தேடல்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
அக்கம், பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தேவைகளை அறிந்து நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
புனர்பூசம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : முயற்சிகள் ஈடேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். பொன் பொருட்ச்சேர்க்கை உண்டாகும். தன வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வியாபாரம் நிமித்தமான அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குணநலன்களில் மாற்றங்கள் காணப்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயண செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களையும் வாக்குறுதிகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
சுவாதி : அனுபவம் கிடைக்கும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் காணப்படும். மறதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மனதில் மேம்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
மூலம் : துரிதம் உண்டாகும்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : குழப்பம் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்கள தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசு துறைகளில் நிதானம் வேண்டும். சிறு தூர பயணம் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில சாதகமான அதிர்ஷ்டகரமான புதிய சூழ்நிலைகள் அமையும். இடமாற்றம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
உத்தியோகம் நிமித்தமான பயணங்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவணம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துச் செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்.
அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சதயம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
ரேவதி : அனுகூலமான நாள்.
*┈┉┅━•• ••━┅┉┈*