இன்றைய நாள் உங்களுக்கு எப்படி, பங்குனி 03, திங்கட்கிழமை, மார்ச் 17/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟯 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟭𝟳•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டில் சிறுசிறு மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு உத்வேகத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இறை வழிபாடு மனத்தெளிவினை ஏற்படுத்தும். விருத்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️அஸ்வினி : தாமதம் ஏற்படும்.
⭐️பரணி : மாற்றங்கள் உண்டாகும்.
⭐️கிருத்திகை : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோக மாற்ற சிந்தனைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதுமையான வாய்ப்புகள் உண்டாகும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
⭐️ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகள் இணைப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
⭐️திருவாதிரை : மந்தத்தன்மை குறையும்.
⭐️புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாசனை திரவிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விஷயங்கள் கைகூடும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிரமம் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சு நிறம்.

⭐️புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.
⭐️பூசம் : ஆர்வம் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுகள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம்.

⭐️மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
⭐️பூரம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐️உத்திரம் : ஆதரவுகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
அரசு துறைகளில் பொறுமைக்கேற்ப முன்னேற்றம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். இலக்கிய துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் பிறக்கும். நட்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.

⭐️உத்திரம் : முன்னேற்றமான நாள்.
⭐️அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️சித்திரை : இலக்குகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
சகோதரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். புதிய கூட்டாளிகளை இணைப்பது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விவேகத்துடன் செயல்பட்டால் மதிப்பும், பாராட்டுகளும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.

⭐️சித்திரை : ஆதரவுகள் உண்டாகும்.
⭐️சுவாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
⭐️விசாகம் : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
⭐️கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரிய செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மூலம் : சுபமான நாள்.
⭐️பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : அனுபவங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️திருவோணம் : முன்னேற்றமான நாள்.
⭐️அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். கலைப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சோர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
⭐️சதயம் : முடிவுகள் கிடைக்கும்.
⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். மனை விற்பனையில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.

⭐️பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
⭐️உத்திரட்டாதி : ஏற்ற,இறக்கமான நாள்.
⭐️ரேவதி : நெருக்கடியான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews