
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது.
குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணத்தை சுலக்சன் தலைமையிலான குழுவினர் செலுத்தியுள்ளனர்.



யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக யாழ்ப்பாணத்தின் பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது