
இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்




தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கை தமிழரசு கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனது முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முள்ளியான் வட்டாரத்தில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எழுந்த முரண்பாடே பி.அலஸ்ரின் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.