யாழில் க.பொ.த சா/த பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவ, மாணவிகளிடம் மர்மநபர்கள் அத்துமீறல்!

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுக ளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று பலவந்தமாகத் திணித்துள்ளனர்.
வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள், மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும் நடந்துகொண்டமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத் துள்ளது.
இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு பெற்றோராலும், சமூக நலன்விரும்பிகளாலும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பிரதேச செயலகங்களின் உரிய அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மாணவ மாணவிகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews