விடுதலை புலிகள் காலத்தில் போதைப்பொருள் கடத்தல் குறைவு..! கடற்படை பேச்சாளர்.. |

தமிழீடு விடுதலை புலிகளின் காலத்தில் வடகிழக்கு ஊடாக போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை.

மேற்கண்டவாறு கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் வடகிழக்கில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை. ஒருவேளை போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால்

வெளிநாட்டு படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய முடியாது. அதுவும் காரணமாக இருக்கலாம். மேலும் வடகிழக்கு ஊடாக போதைப்பொருள் கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறும் நிலையில் அதிகளவான கடத்தல்களை

கடற்படையினர் முறியடிப்பது கடற்படையினரின் பலவீனம் அல்ல. அது கடற்படையினரின் செயற்பாடுகள் துரிதமாகி வருவதையே காட்டுவதாகவும் கூறியிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews