காரைநகரில் மான் பாய்வது உறுதி – வீட்டில் இருந்து வெளியேறிய பாலச்சந்திரன் உறுதி!

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வருமான சட்டத்தரணி மணிவண்ணனுடன் இணைந்து காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவை, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலச்சந்திரன் கைளளித்தார்.
அதன்பின்னர் க.பாலச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
காரைநகர் மண்ணை நேசிப்பவர்கள் நிச்சயமாக என்னை நேசிப்பார்கள். நான் தவிசாளராக இருந்த அந்த இறுதி 7 மாதங்களை நினைத்துப்பார்ப்பார்கள். அந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபட்டு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டேன். நான் எமது பிரதேச அபிவிருத்திக்காக கொழும்பு வரை சென்று உயர்மட்ட அமைச்சர்களைக் கூட சந்தித்தேன் வெற்றியும் கண்டேன்.
என்னைப் பொறுத்தவரை எமது காரை மண்ணின் அபிவிருத்தியே எனது இலக்கு. இங்கு சின்னங்கள் முக்கியமில்லை. சின்னங்கள் மாறினாலும் எனது எண்ணங்கள் மாறாது.
தமிழ் மக்கள் கூட்டணியில் பலமான அணியொன்று இம்முறை களமிறக்கப்பட்டுள்ளது. காரைநகரில் இம்முறை மான் பலமாக பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை.
என்னை, எனதுசேவையை, எனது காரைநகருக்கான அர்ப்பணிப்பை மக்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு மான் சின்னத்தில் போட்டியிடும்  6 வட்டார வேட்பாளர்களுக்கும் தமது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றிபெறச்செய்வார்கள் என பலமாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews