யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழ் அரசுக் கட்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக் கட்சி இன்று (19) தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ அரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது.
இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில இன்று காலை கிழக்கு மாகாணத்தில் தாக்கல் செய்திருத்தனர்.
இதனைத் தொடர்ந்து வடக்கில் யாழ் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று மாலை தாக்கல் செய்துள்ளது.
இதனை கட்சியின் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாண தேர்தல் திணைக்களத்தில் இதற்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews