
குறித்த சம்பவம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 12 மதுபான போத்தல்கள், மற்றும் 1,75,000 ரூபா பணம் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பேஸ்புக் குழுவுடன் இணைந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார்
மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது விருந்துபசார இடத்தில் 24 பேர் இருந்துள்ள நிலையில் மேலும் 22 பேர் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்