அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வணக்கஸ்தலங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் வீடுகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதால் கல்வி கற்கும் மாணவர்கள் வயோதிபர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்கள் உட்பட பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது
வணக்கஸ்தலங்கள் மற்றும் ஒலி வழங்குனர்கள் குறித்த பிரதேசத்திற்குள் ஒலி எழுப்புவதற்கு இனி மருதங்கேணி போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த அறிவிப்பு வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தியால் விடுக்கப்பட்டு அனைத்து பிரதேசங்களிலும் சுவரொட்டி மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews