போக்குவரத்தில் விபத்து ஏற்படும் அபாயம், கண்டுகொள்ளாத மருதங்கேணி காவல்துறை, பிரதேச சபை  பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியில்  அம்பன் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீதியில் கொண்டப்பட்ட மணல் மண்ணை இதுவரை அகற்றாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி போன்ற வாகனங்களில் செல்வோர் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், பருத்தித்துறை பிரதேச சபை, மருதங்கேணி காவல் நிலையம் ஆகியோருக்கும் அறிவித்துக் இதுவரை ஏந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இரவு வேளைகளிலும் மற்றும் தூர இடங்களிலிருந்தும் செல்கின்றவர்கள் வீதியில் கொட்டப்பட்டு காணப்படும் மணல் மண்ணின் மேலால் மோட்டார் சைக்கிள்களை செலுத்துகின்றபோது சறுக்கல் நிலை ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர்.
 இது தொடர்பான விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக அக்கறையுள்ள பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த மணல் மண் சட்டவிரோத மணல் ஏற்றிச் செல்வோர் காவல்துறை அல்லது சிறப்பு அதிரடி படை அவர்களை கைது செய்யும் நோக்கில் துரத்திச் செல்லும் போது  மணல் மண்ணை காப்பெற் வீதியில் கொட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews