
நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபைக்கு அணில் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை குழுவை ஆதரிக்குமாறு சுயேட்சை குழுவின் தலைமை வேட்பாளரும் எழுத்தாளருமான முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளார்
வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் இன்று(22)கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எங்களுடைய சுயேச்சை குழு நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது எங்களுடைய சுயேச்சை குழுவின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்த வகையில் பருத்துத்துறை பிரதேச சபையின் 12 வட்டாரங்களிலும் அணில் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம்.பருத்தித் துறையின் 12 வட்டாரங்களிலும் வசிக்கும் மக்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் அணில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பது எங்களுடைய அன்பான கோரிக்கையாகும்.
ராவணன் தன்னுடைய கைகளால் அணிலுக்கு மூன்று கோடு இட்டது போல் இந்த தேர்தலில் மக்கள் அணில் சின்னத்திற்கு புள்ளடி இடுவதன் மூலம் எங்களுடைய வட்டாரங்களை நிலையான அபிவிருத்தி பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.
வாக்குச் சீட்டில் இறுதி இடத்தில் இருக்கும் அணில் சின்னத்திற்கு புள்ளடியிட்டு நமது சுயேட்சை குழுவை வெற்றி பெறச் செய்து ஒரு மறுமலர்ச்சியான யுகத்தை கட்டியெழுப்ப முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.