
*_꧁. 🌈 பங்குனி: 𝟭𝟬 🇮🇳꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟰•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் தன உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.
⭐️அஸ்வினி : ஆதரவான நாள்.
⭐️பரணி : மதிப்பு அதிகரிக்கும்.
⭐️கிருத்திகை : ஆதாயமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
மனதை உறுத்திக்கொண்டு இருந்துவந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழிலில் இருந்துவந்த முடக்க நிலைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️கிருத்திகை : தீர்வுகள் ஏற்படும்.
⭐️ரோகிணி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் உடல் சோர்வு உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : முடிவுகள் தாமதமாகும்.
⭐️திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
வாழ்க்கை துணைவரின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். செயல்பாடுகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பிடித்த பொருட்களை வாங்கி முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உணவு விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கவலை மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
⭐️புனர்பூசம் : அனுகூலமான நாள்.
⭐️பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️ஆயில்யம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் பிறக்கும். எந்த ஒரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சந்தேக உணர்வுகளை தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாலின மக்கள் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், உதவிகளும் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.
⭐️மகம் : இன்னல்கள் குறையும்.
⭐️பூரம் : புத்துணர்ச்சியான நாள்.
⭐️உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கௌரவப் பதவிகள் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். தனவரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடமான சிந்தனைகள் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
பயண விஷயங்களில் மாற்றங்கள் உருவாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். தடங்கல் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிகப்பு நிறம்.
⭐️சித்திரை : மாற்றங்கள் உருவாகும்.
⭐️சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்
⭐️விசாகம் : தீர்வு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். கூட்டாளிகள் மூலம் பொருட்ச்சேர்க்கைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் ஏற்படும். சஞ்சலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️அனுஷம் : லாபங்கள் மேம்படும்.
⭐️கேட்டை : அனுபவங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
விவசாய பணிகளில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனை தொடர்பான செயல்களில் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவேகம் வேண்டும். தொழில் செயல்பாடுகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️மூலம் : ஆதரவான நாள்.
⭐️பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அலைச்சல்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு நிறம்.
⭐️உத்திராடம் : சேமிப்புகள் குறையும்
⭐️திருவோணம் : வேறுபாடுகள் நீங்கும்.
⭐️அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எண்ணிய பணிகளில் சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதிலிருந்து வெளிப்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️அவிட்டம் : புரிதல்கள் மேம்படும்.
⭐️சதயம் : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
கலை நுட்பமான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழிலில் மேன்மையும், பாராட்டுகளும் பெறுவீர்கள். பூமி விருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். மறுதாரம் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்கள் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பொறுப்புக்கள் மூலம் மதிப்புகள் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ரேவதி : மதிப்புகள் உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*