
_꧁. 🌈 பங்குனி: 𝟭𝟭 🇮🇳꧂_*
*_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உத்தியோக பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மருத்துவ பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
⭐அஸ்வினி : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐பரணி : மேன்மையான நாள்.
⭐கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
⭐ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஒருவிதமான படபடப்பு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெரியவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️திருவாதிரை : தாழ்வுமனப்பான்மை நீங்கும்.
⭐️புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் – ராசி: 🦀_*
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் ஏற்படும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். அதிகார பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுதல் அவசியம் ஆகும். பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூசம் : வரவுகள் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : தொடர்புகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
சந்தேக உணர்வுகள் எதுவும் இன்றி தீரவிசாரித்து முடிவுகளை எடுப்பீர்கள். பங்காளிகள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் அவசியமாகும். உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் விருப்பங்கள் உருவாகும். கவலை குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️மகம் : வேறுபாடுகள் குறையும்.
⭐️பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️உத்திரம் : விருப்பங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி – ராசி: 👩_*
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உருவாகும். சேமிப்பு செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அஸ்தம் : ஆதாயகரமான நாள்.
⭐️சித்திரை : தாமதங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் – ராசி: ⚖_*
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
⭐️சித்திரை : இன்னல்கள் குறையும்.
⭐️சுவாதி : முன்னேற்றமான நாள்.
⭐️விசாகம் : லாபங்கள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் மறையும். உத்தியோக பணிகளில் மேன்மைக்கான வாய்ப்புகள் ஏற்படும். சங்கீதம் மற்றும் எழுத்துத் தொடர்பான பணிகளில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலையாட்களை திறமைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வதன் மூலம் லாபங்கள் உருவாகும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️விசாகம் : தாமதங்கள் மறையும்.
⭐️அனுஷம் : புதுமையான நாள்.
⭐️கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு – ராசி: 🏹_*
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் தீர்வுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்.
⭐️மூலம் : ஆதாயம் உண்டாகும்.
⭐️பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
⭐️உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் – ராசி: 🦌_*
அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். புதிய உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுமையான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். சமூகத்தில் பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். வியாபார தொழில் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். மறதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️திருவோணம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️அவிட்டம் : மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் – ராசி: 🍯_*
எதிர்பாராத செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற தர்க்கங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் காரியங்களில் இருக்கக்கூடிய தடைகளை அறிந்து கொள்வீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️அவிட்டம் : விரயங்கள் உண்டாகும்.
⭐️சதயம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐️பூரட்டாதி : தடைகளை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் – ராசி: 🐟_*
புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். புதுவிதமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் நீங்கி மேன்மை உண்டாகும். சமூகப் பணிகளில் கீர்த்தி உண்டாகும். நேசம் அதிகரிக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
⭐️பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️ரேவதி : கீர்த்தி உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*