
பூநகரி, மன்னார், தெஹியத்த கண்டி போன்ற உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை அரசியல் கட்சிகள் இன்றும் கையளித்திருந்தன.



ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வைத்தியநாதன் தவநாதன், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கையளித்திருந்தனர்.