
யாழ் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய செபமாலைக் கடை ஆலய சூசையப்பர் தந்தையர் மன்றத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டு பக்தர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.





நேற்று 30.03.2025 ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக பங்குத்தந்தை M. நிக்சன் கொலின் அடிகளார் மற்றும் மண்ணின் மைந்தன் அ. றொபின்சன் யோசவ்ப் அடிகளார் ஆகியோரால் ஆசீர் வதிக்கப்பட்டு செபமாலைக் கடை திறந்துவைக்கப்பட்டது.
மேற்படி செபமாலைக்கடை ஆலய நிர்வாகத்தின் மேற்பார்வையில் சுன்னாகம் புனித சூசையப்பர் தந்தையர் மன்றத்தினரால் நிர்வகிக்கப்படும் என பங்குத்தந்தை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.