
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக இதழான ஞானச்சுடர் 327 வெளியீடு கடந்த 28.03.2025 காலை 10:45 மணியளவில்
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது.







இதில் வெளியீட்டுரையினை ஓய்வு பெற்ற அதுபர் வ.கணேசமூர்த்தி நிகழ்த்தினார்.
மதிப்பீட்டுரையினை ஆசிரியர் நி.பாபுதரன் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதேவேளை உதவித் திட்டங்களாக சங்கானை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, நரம்பியல் புனருத்தாபன பிரிவுக்குரிய பக்கவாத நோயாளிகளுக்கான சிகிச்சை இயன் மருத்துவருக்கு வேதனம் வழங்குவதற்கு ரூபா 70,000. பங்குனி மாத நிதியும், யா/ வலி/ தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளி பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, பரிசளிப்பு நிகழ்வுக்காக வருடாந்தம் வழங்கப்படும் ரூபா 40,000 பெறுமதியான புத்தகங்களும், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையின் கோரிக்கைக்கு அமைவாக,
தொல்லியல் ஆய்வுக்காக ரூபா 25,000 நிதியும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.