
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SAHYADRI’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக 2025 ஏப்ரல் 04 தீவை வந்தடைந்தது, கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.
தீவை வந்தடைந்த ‘INS SAHYADRI’ என்ற பிரிகெட் ரக போர்க்கப்பல், 143 மீட்டர் நீளமும், 320 அங்கத்தவ குழுவினர்களையும் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக கெப்டன் ராஜத் குமார் (Captain Rajat Kumar) பணிபுரிகின்றார்.
‘INS SAHYADRI’ என்ற கப்பல், தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாட்டு கடற்படையினரிடையே நட்புறவை மேம்படுத்தவும், தீவின் சுற்றுலாத் தலங்களை பார்வையிடவும், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ‘INS SAHYADRI’ என்ற கப்பல் 2025 ஏப்ரல் 07 அன்று தீவில் இருந்து புறப்பட உள்ளது.