ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்கள் இலங்கையை விட்டு வெளியேறின..!

2025 ஏப்ரல் ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக தீவு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) ஆகிய கப்பல்கள், விஜயபாஹூ கப்பலுடன் இணைந்து ஈடுபட்ட கூட்டுப் பயிற்சியின் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2025 ஏப்ரல் 4 தீவை விட்டு வெளியேறியது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை நடைபெற்றது.
இந்தக் கூட்டு (PASSEX) கடற்படைப் பயிற்சியில், கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதைகள் செலுத்திய பின்னர் பயிற்சி முடிவடைந்தது.
மேலும், இக்கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாட்டு கடற்படையினரிடையே நட்புறவை மேம்படுத்தும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக பல பகுதிகளுக்குச் செல்வதற்கும் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்கும், கப்பலின் ஆயுதங்களின் செயல்பாட்டு செயல்திறனைக் கண்காணிக்கும் வாய்ப்பு கடற்படை வீரர்களுக்குக் கிடைத்தது.
இந்த விஜயத்தின் போது, ‘BUNGO’ கப்பலின் கட்டளை தளபதி கமாண்டர் TANAKA Koji மற்றும் ETAJIMA கப்பலின் கட்டளை தளபதி ODA Takayuki ஆகியோர், மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா மற்றும் நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் புத்திக லியனககே உடன் 2025 ஏப்ரல் 01 அன்று உத்தியோகபூர்வ சந்திப்புகளையும் நடத்தினர்.
மேலும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் மூலம் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும், மேலும் இந்த விஜயங்களுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவம் எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.

Recommended For You

About the Author: Editor Elukainews