
வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை இன்று(10) வெளியிட்டுள்ளது
அதில் யாழ்ப்பாண கடலை ஆக்கிரமிக்கும் சீன கடலட்டை பண்ணைகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம்
11ஆம் தேதி வேலணைக்கு வரும் பிரதமர் ஹரணி அமர சூர்யவின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல விரும்புகிறோம்
இவை தொடர்பில் முன்கூட்டியே அறிந்து கொண்ட ஆளுநர் செயலகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிரதமர் வருவதற்கு முன்பாக கடல் அட்டை பண்ணைக்காக கடல் முழுவதும் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு வேலிகள் அவசர அவசரமாக அகற்றப்படுகிறது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது
இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ஆளுநர் செயலகம் எந்த ஒரு தகவலையும் வழங்கவில்லை என்று தெளிவு படுத்துகிறோம்
அத்துடன் இந்த விடயத்திற்கு ஆளுநர் செயலகத்திற்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது