நாளை, மறுதினம் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…,!இலங்கை ஆசிரியர் சங்கம் பெற்றோரிடம் கோரிக்கை.

மாணவர்களை பணயமாக வைத்து அரசு நடாத்தும் கபட நாடகத்திற்கு பெற்றோர்கள் துணை போகாமல் நாளையும், நாளை மறுதினமும்  (21,22) நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

 

மாணவர்களை பணயமாக வைத்து அரசு நடாத்தும் கபட நாடகத்திற்கு பெற்றோர்கள் துணை போகாமல் நாளையும், நாளை மறுதினமும்  (21,22) நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி எதிர்வரும் 25ம் திகதி முதல் ஆசிரியர்கள் கடமைக்கு திரும்ப உள்ளோம். அன்றைய தினம் முதல் உங்களின் பிள்ளைகளை நாங்கள் பாதுகாப்பாக பொறுப்பெடுத்துக் கொள்ளுவோம் எனவும் 101 நாட்களாக தொழிற்சங்க போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் எதுவும் கைவிடப்படவில்லை. மாற்று வழியில் போராட்டத்தை முன்னெடுக்கப்  போகின்றோம். 10165 பாடசாலைகளில் 3000 பாடசாலைகளே ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இவர்களே பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதுடன் ஏனைய 7165 பாடசாலைகள் அதிபர்,  ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடாது விடப்படவுள்ளனர்.

ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஒரு காரணமாக வைத்து, ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது என அரசு ஏற்றுக் கொண்டுள்ளும் வகையிலும் அதற்கு  தீர்வு வழங்காமல், பெற்றோர்களையும், சமூகத்தையும் எமக்கெதிராக திரட்டி, வேறு பணியாளர்களை ஆசிரியப் பணியாற்றுமாறு கூறி வருகின்றது.
தற்போது அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறி, பெற்றோர்களையும்,  சமூகத்தையும் தூண்டிவிடும் முயற்சியை  அரசு மேற்கொண்டுள்ளது. அரசு அறிவித்த 21ம், 22ம் திகதிகளில் பாடசாலைகளுக்கு செல்லப்போவதில்லை என அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக முடிவெடுத்துள்ளோம். மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க 25ம் திகதி முதல் கடமைக்கு சென்று எமது போராட்ட வடிவத்தை மாற்றியுள்ளோம்.
எங்களுக்கு எதிராக பெற்றோரையும், சமூகத்தையும் தூண்டிவிட்டு அதில் அரசாங்கம் குளிர்காயலாம் என நினைத்தார்களோ, அதற்கு நாங்கள் மாற்று வியூகங்களை அமைத்து,  மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது, பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும் தெளிவூட்டி, இந்தப் போராட்டம் திசைமாறாமல் இருக்க வேண்டும் என இந்த மாற்று நடவடிக்கையை எடுத்துள்ளோம் எனவும்  தற்போது 3000 பாடசாலைகள் மட்டும் ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் மாத்திரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது.  ஏனைய பாடசாலைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் 10165 பாடசாலைகளையும் ஒருங்கிணைத்து மீண்டும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கிடையில் பெற்றோர்களையும் இணைத்து பாடசாலைகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை 25ம் திகதிக்கு பின்னர் நடாத்தவுள்ளோம். இது அரசுக்கெதிரான பாரிய போராட்டங்களாக அமையும். சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதிநிலையாக 2018 இடைக்கால சம்பள தீர்வு யோசனைக்கு  அமைய வேண்டும் எனவும், இந்த சம்பள முறைமையை ஒரே தடவையில் வழங்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.  எனவே 21ம், 22ம் திகதிகளில் அனைத்து  அதிபர்,  ஆசிரியர்களும் பணிப் புறக்கணிப்பில்  ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்வதோடு,  பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி இரு தினங்களும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews