கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை உலக நாடுகளில் தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. உலக சுகாதார அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.
இதற்காக மலிவான விலையில் தடுப்பு மருந்துகளைப் போன்ற கொரோனாவை எதிர்த்துப் போராடும் சக்திவாய்ந்த மாத்திரைகளை உருவாக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டது. இதற்கு நாட்டைச்சேர்ந்த மெக் அண்ட் கோ, ரிச்பேக் பயோ தேரபீயூடிக் ஆகிய இரு மருந்து நிறுவனங்களும் ஆய்வில் ஈடுபட்டன.
இந்த ஆய்வின் பலனாக தற்போது மால்நியூபைராவர் என்கிற புதிய வாய்வழி மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலமாக ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கிடைக்காத ஏழை குடிமக்கள் பயன்பெறுவர் என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது.
இந்த மாத்திரை மிதமான கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை குணப்படுத்தும். ஆனால் வைரஸ் தாக்கத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் உலகின் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் இந்த மாத்திரை குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இதன்மூலமாக அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம்வரை உலக நாடுகள் இந்த மாத்திரை தயாரிக்க 22.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்க கோரப்படுகிறது.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் ஆக்ட்-ஏ பரிசோதனைக்காக உலகநாடுகள் 18.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த மாத்திரை குறித்து முன்னதாக ஹாவர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் ஈடுபட்டது.இதற்கு மருந்து நிறுவனங்கள் எவ்வளவு விலை நிர்ணயிக்கலாம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த மாத்திரையின் வேதியியல் பார்முலாவை அளித்தால் அவர்கள் 20 அமெரிக்க டாலர்களுக்கு இந்த மாத்திரைகளை விற்க முடியும் என இந்த ஆய்வின்மூலம் தெரியவந்தது.
மேர்க் அண்ட் கோ நிறுவனத்திற்கு ஏற்கனவே எட்டு முன்னணி இந்திய மருந்து நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு உள்ளது. அடுத்த காலாண்டுக்கு தேவைப்படும் அளவுக்கு இந்த மாத்திரைகளை தயாரிக்க ஆக்ட்-ஏ ஆவணத்தில் திட்டமிமிதமான கொரோனா அறிகுறி உள்ளவர்கள், குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடிமக்கள் இந்த மாத்திரையால் அதிக பலனடைவர் என உலக சுகாதார அமைப்பு கணிக்கிறது