
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மீனவர்கள் மீன்பிடிப் படகு ஒன்றில் இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம் சாட்டி இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த படகே இவ்வாறு இந்திய கரையோர காவல் படையினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த படகு தற்போது நாகை பட்டினம் துறைமுகத்திற்குகொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக இந்தியத் தரப்பு செய்திகள் தெரிவிப்பதோடு நாளைய தினம் நீதிபதியின் முன்பாக ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.