
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் பாராளு மன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனை மரியாதை நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தற்போதைய நிலை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக தான் கடமையாற்றிய போது தான் எதிர்நோக்கிய சவால்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.