
யாழ்.சாவகச்சோியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருக்கின்றது.
கிணற்றை துப்புரவு செய்தபோதே கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கிணற்றில் சந்தேகத்துக்கிடமான கட்டப்பட்ட உரப்பை இருப்பதை துப்பரவு செய்தவர்கள் அவதானித்தனர்.
இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
குறித்த பையினுள் ஆறுக்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸார் குறித்த வெடிபொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் அகற்றப்பட்டது.