ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே இவ்வாறு கொழும்பு வருகின்றார்.
அரச மேல் மட்டம், சிவில் அமைப்புகள் உட்பட பல தரப்புகளுடனும் பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள அவர், தனது பயணத்தின் முடிவில் விசேட அறிக்கையொன்றையும் ஐ.நாவில் கையளிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
மனித கடத்தல் தொடர்பான வடக்கு அயர்லாந்து சட்டசபை குழு, போதைப்பொருள் மற்றும் குற்றத்துக்கான ஐ.நா. அலுவலகம், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு என்பனவற்றில் மேற்படி அறிக்கையாளர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.