கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (27-10-2021 ) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்களின் பயிர் செய்கை காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பிலும் குறித்த கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது அதாவது வனவளத் திணைக்களத்தின் ஆலோசகர் உள்ளடங்கிய உயர் அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்
இதன்போது ஆனைவிழுந்தான் பகுதியில் வனவள திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 600 ஏக்கர் வரையான நிலப்பரப்பு மற்றும் கரைச்சி கண்டாவளை பூநகரி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது
இதில் கரைச்சி பிரதேச செயலாளர் கண்டாவளை பிரதேச செயலாளர் பூநகரி பிரதேச செயலாளர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.