யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்து வைக்குமாறு யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தன் அவர்களால் யாழ்ப்பாண மாநகரசபை அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது
குறிப்பாக நாக விஹாரையின் பீடாதிபதி அந்த இடத்தினை பௌத்த மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார். அதனைத் தடுப்பதற்காக வருமுன் காப்பதற்காக எதிர்கால நிலைமை காப்பாற்றும் முகமாக நடவடிக்கையாக ஆரிய குள பகுதியில் சிவபெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறுதனது பிரேரணையில் கோரியுள்ளார்.
இதற்கு பதில் உரையாற்றிய முதல்வர் வி.மணிவண்ணன் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சிவபெருமானின் சிலை என்பது இந்துக்களின் கடவுள் ஏற்கனவே யாழ்ப்பாண நகரத்தில் மும்மத மக்களும் வாழ்கின்ற நிலையில் ஒரு மதத்தை மட்டும் நாங்கள் பிரதிநிதி படுத்துவது நல்லதொரு விடயம் அல்ல அனைத்து மத மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த இடத்தினை புனித பிரதேசமாக தூய்மையாகவும் பேணுவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது எனவே சிவபெருமானின் சிலையை நிறுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.