இந்தியாவில் உள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, தனது இலங்கை விஜயத்தின் போது ஏனைய உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, இந்தத் திட்டங்களில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்
.
அத்துடன், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் எடுத்துக் கொண்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்
.
அதானியின் இலங்கை விஜயம் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான விஜயத்தின் போது மன்னார் காற்றாலை மின் நிலையத்திற்கு விஜயம் செய்த கௌதம் அதானி, இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.