
உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழமையான ‘ஸ்டாம்ப்’ எனப்படும் தபால் தலை, ஏலத்துக்கு வருகிறத்துக்கு வெளியிடபபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, 61.82 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘சோத்பை’ என்ற ஏல நிறுவனம், டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இந்த உலகின் மிகப் பழமையான ஸ்டாம்பை ஏலத்துக்கு விட உள்ளது.பென்னி பிளாக் எனப்படும், பிரிட்டன் நாணயமான ஒரு பென்னிக்கு விற்கப்பட்ட மூன்று ஸ்டாம்ப் தொகுப்பில், இரண்டு ஏற்கனவே அருங்காட்சியகத்தில் உள்ளன.
மூன்றாவது ஸ்டாம்பை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியான, ஸ்டாம்ப் சேகரிப்பாளர் ராபர்ட் வாலஸ் வைத்துள்ளார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அந்த ஸ்டாம்பை வாங்கிய அவர் ஆய்வுகளுக்குப் பின், அது, உலகின் முதல் ஸ்டாம்ப்களில் ஒன்று என்பதை உறுதி செய்துள்ளார்.
1840 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ஒருவர் எழுதிய கடிதத்தில் இந்த ஸ்டாம்ப் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் ராணி விக்டோரியாவின் உருவம் உள்ள இந்த ஸ்டாம்ப், தற்போது ஏலத்துக்கு விடப்பட உள்ளது. இது, 61.82 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.