ல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தில் தந்தையை இழந்த 33 மாணவர்களுக்கு தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமைப் பீட வங்கி முகாமையாளர் வி.சிறிநாதன்,மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் இர்பான்,சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.