அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெருமளவானவர்களை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வரிசையில் நிற்கும் யுகத்தை உருவாக்கி அன்றாட வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யாமையால் கல்வி நெருக்கடியை உருவாக்கியுள்ளது,
மேலும் அரசாங்கம் உரத்தட்டுப்பாட்டை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர்கள் இனி பொறுமையாக இருக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரளுமாறும், கொழும்புக்கு செல்லும் எதிர்ப்பு அலையில் கலந்துக் கொள்ளுமாறும் அவர் அனைத்து குடிமக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
அரசாங்கம் மக்களையும் அவர்களின் குறைகளையும் புரிந்துகொண்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.