
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ்ரகளின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி 1711வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் மாதம் தோறும் 30ம் திகதி வீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.