அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு,திருமதி ஜெகநாதன் சுபராஜினி ஆகியோரால் மூன்று சட்ட நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன.
சிரேஸ்ட சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் தலைமையில் இன்று தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சட்ட நூல்கள் வெளியீடும் நிகழ்வு இடம்பெற்றது.
சிரேஸ்ட சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் மற்றும் அவரது துணைவியார் தர்மரெட்ணம் சுபராஜினி ஆகிய சட்டதரணிகளால் எழுதப்பட்ட ஆரம்ப நடைமுறையின் நெளிவு சுழிவுகள், குறுக்கு விசாரணையுள் புதையல் ஆகிய இரு தமிழ் நூல்களும் ஒரு ஆங்கில நூலுமாக மூன்று நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளான எம்.பி முகைதீன்,டாக்டர் அப்துல் கபூர் ஆகியோர் கலந்து கொண்டு இருந்ததுடன் நூல்களுக்கான கருத்துரைகளையும் சட்டங்கள் தொடர்பான விளங்கங்களையும் விரிவாக ஆற்றியிருந்தனர்.
மேலும் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பேராசிரியர் கலாநிதி எஸ்.குணபாலன் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலாளர் அதிசயராஜ் பாடசாலை அதிபர் பா.சந்ரேஸ்வரன் மற்றும் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட சட்டத்தரணிகள் கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.