இலங்கையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தொடர்பான இரண்டாம் கட்ட விழிப்புணர்வு பயிற்சி பட்டறை மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் பொதுமக்களுடன் தொடர்பாடல்களை கொண்டுள்ள அரச அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகளுக்கான சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தொடர்பான தெளிவூட்டும் விழிப்புணர்வு குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.
ஜெர்மன் நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயல் திட்டத்தின் கீழ் டெமொகரசி ரிபோட்டின் இன்ரநெஸனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் சர்வமத இளைஞர் யுவதிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பட்டறையாக நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
டெமொகரசி ரிபோட்டின் இன்ரநெஸனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் ஜெகதீசன் வழிகாட்டலின் கீழ் நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளரும், வளவாளருமான கிழக்குப்பல்கலைக்கழக கல்வி பிள்ளைநலத்துறை விரிவுரையாளர் சந்துரு மரியதாஸ் மற்றும் மியானி நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை ஜி.மகிமைதாஸ் அடிகளார் இணைந்த ஏற்பாட்டில் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் வளவாளராக சட்டத்தரணி ஏ .ஐங்கரன், டெமொகரசி ரிபோட்டின் இன்ரநெஸனல் ஸ்ரீலங்கா நிறுவன நிதி பொறுப்பாளர் ஏ.ரெபேகா மற்றும் சர்வமத இளைஞர்,யுவதிகள் கலந்துகொண்டனர்.