.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், சி.டி.ஓ நிறுவனத்தின் மேற்பார்வையில், முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பயிற்சி மற்றும் அதற்கான வாழ்வாதார உபகரண உதவித் திட்டம் வழங்குவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில், மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
திட்டத்திற்காக, இதுவரை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள, தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அமைந்த பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றவர்களில் இருந்து, நேர்முகத்தேர்வின் ஊடாக, 18 வயது தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட 37 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, தையல், மின்னியல், விவசாயம் துறைசார்ந்த பயிற்சிகளுடன், அவைசார்ந்த உபகரணங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் பங்கேற்றனர்.