
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 05 ஆண்களும், 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,770.ஆக அதிகரித்துள்ளது.