வரலாறுகள் எங்களைவிட்டு மாறிப்போகிறது. வரலாற்றினை ஆவணங்களாக மாற்றவேண்டும். தற்போதுள்ள மாநகர சபையின் முதல்வர் வரலாற்றிலே ஆர்வமுடையவர் என்ற வகையிலே உங்களுடைய காலத்திலே எமது வரலாற்றை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
யாழ் மாநகர சபையினால் வருடந்தோறும் வெளியிடப்படும் நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு ஆசி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு
தற்போது யாழ் மாநகர முதல்வராக உள்ள வரின் செயற்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை அண்மையில் அவரால் மேற்கொள்ளப்படும் பணிகள் மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது குறிப்பாக அழுக்கு நிறைந்த ஆரியகுளத்தினை அழகாக மாற்றும் வேலையில் ஈடுபடுவது மிகவும் சிறந்தது
இன்று ஆரிய குளம் யாருடையது என்பது யாருக்கும் தெரியாது. பழையதமிழ் மன்னர்களுடைய காலத்தில் அமைக்கப்பட்டது தான் இந்த ஆரியகுளம். ஆனால் இன்று ஆரியகுளம் யாருக்குச் சொந்தமானது என அனைவரும் வினவுகிறார்கள். சிலர் வரலாறு தெரிந்தவர்கள் கூட அதனை தெளிவாக கூற முன் வருகின்றார்கள் இல்லை.
இது ஆரியகுளமானது ஆரிய சக்கரவர்த்தி மன்னனால் கட்டப்பட்ட குளம்.
மதிப்பார்ந்த முதல்வர் அவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன் அதாவது உங்களுடைய காலத்திலாவது எமதுவரலாற்று அடையாள சின்னங்கள் அடையாளப் படுத்தப் பட வேண்டும் அத்தோடு ஆரிய குளமானது உண்மையிலேயே இது எமது பழைய தமிழ் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட குளம் என்று அடையாளப்படுத்துங்கள் அந்த வேலை இந்த முதல்வரின் காலத்திலாவது நடைபெற வேண்டும்.
சங்கத்தமிழர் நாவலர் பிறந்த இடத்தில் தான் இன்றைய தினம் இந்த நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகின்றது.
வரலாறுகள் எங்களைவிட்டு மாறிப்போகிறது வரலாற்றினை ஆவணங்களாக மாற்றவேண்டும் வரலாற்றிலே ஆர்வமுடையவர் என்ற வகையிலே உங்களுடைய காலத்திலே எமது வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்
நாவலர் பிறந்த வளவு பற்றி நீங்கள் பதவிக்கு வர முதல் ஏற்கனவே இருந்த முதல்வர்கள் ஆணையாளர்களுடன் இது பற்றி நான் பேசி இருக்கின்றேன்
கிழக்கிலங்கையில் விவேகானந்தர் பிறந்த இடத்தினை எவ்வளவு அழகாக வரலாற்று இடமாக வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆனால் இங்கே நாவலர் பிறந்த இடத்தை நாங்கள் சரியாக பேணவில்லை. இங்கே நாய்க்கு ஊசி போடவும் தடுப்பூசி போடுவதற்கு எந்த இடம் பயன்படுத்தப்படுகின்றது.
எனவே இந்த புனித பிரதேசத்தினை உங்களால் பாதுகாக்க முடியாமல் இருந்தால் அதனை துர்க்காதேவி தேவஸ்தானத்திடம் கையளியுங்கள். அல்லது இந்து மாமன்றத்தின் அளியுங்கள். இங்கே இந்த மண்டபத்தில் ஒரு நாவல் கூடிய படம் கூட இல்லை. ஒரு அந்த மனிதனுடைய படத்தை கூட இங்கே பொரிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இங்கே என்ன நடக்கிறது என தெரியவில்லை.
உங்களால் இதனை சைவப் பாரம்பரிய முறைப்படி பேணி பாதுகாக்க முடியா விட்டால் அதனை எங்களிடம் ஒப்படையுங்கள். இங்கே இந்த நாவல் மண்டபத்திலே ஒளிவிழா வைக்கின்றார்கள் எங்கேயாவது ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உங்களுடைய சரஸ்வதி பூசையினை வைக்க அனுமதிப்பார்களா எனவே ஆகவே இங்கே எல்லாம் நடைபெறுகின்றது நாவலரை தவிர எல்லாமே நடக்கின்றது
யாழ்ப்பாண மாநகரசபையினுடைய வரலாற்று நிகழ்வினை தமிழன் என்ற வகையிலே நான் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் எமது வரலாற்று இடங்களை ஆவணப்படுத்துங்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாக்கபடும் எனவும் தெரிவித்தார்