“இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த நாடு இதுவரை கண்டிராத மோசமான அமைச்சரவை தற்போதைய அமைச்சரவை.”
– இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளா் டியூ குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் குறுகிய நோக்குடையவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரிசி, தேங்காய், சீனி, உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பான அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் தற்போதைய அமைச்சரவை துளியும் துப்பற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற திட்டத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் செயற்படுவதும் அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட நகைப்புக்குரிய ஒரு நடவடிக்கையாகும்.
இந்நிலையில், பணத்தை அச்சிட்டே அரசின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2 ஆயிரம் பில்லியன் வரையில் பணத்தை அச்சிட்டுள்ளார்கள்” – என்றார்.