பிப்ரவரி 2022க்குள் ஐரோப்பாவில் 5 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் நேரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கரோனா பரவியுள்ளது.
தற்போது உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இருப்பினும், பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது மூன்றாவது அலை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளிலும் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேகத்தில் தொற்று பரவல் நீடித்தால், அடுத்த பிப்ரவரிக்குள் (2022 பிப்ரவரி) இன்னும் 5 லட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும் என எச்சரித்துள்ளது