பருத்தித்துறை பொலிஸாரின் ஏற்பாட்டில் அம்பன் பிரதேச வைத்திய சாலையில் சிரமதானப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
பருத்தித்துறை பொலிஸார் ஏற்பாடு செய்த குறித்த சிரமதானப் பணியில் பருத்தித்துறை பிரதேச சபை அம்பன் கிராம மக்கள் மற்றும் பருத்தித்துறை போலீஸ் உட்பட சுமார் 100 பேர் வரை இணைந்து இன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி H.M கேரத் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அம்பன் கிராம மக்கள் உட்பட சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.