மலையக பாடசாலை மாணவர்களின் கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான கல்வி நடவடிக்கைகள், சிரமமின்றி தொடர்வதற்கு, வி ஆ கொவிட் சேவ் அன்ட் பக் ரூ ஸ்கூல் எனும் செயற்திட்டங்களின் கீழ், தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரோட்ராக்ட் கழகம் பீஸ் சிட்டி ஹட்டனின் ஏற்பாட்டில், கொழும்பு மிட்சிட்டி மற்றும் வத்தளை ரோட்ராக்ட் கழகங்களின் அனுசரனையுடன் நடைபெற்ற வி ஆ கொவிட் சேவ் அன்ட் பக் ரூ ஸ்கூல் எனும் செயற்திட்டங்களின் கீழ், 12 இலட்சம் ரூபா பெறுமதியான கை தொற்று நீக்கி பொதிகள், தொற்றுநீக்கிகள், கை சுத்திகரிப்பான், முகக் கவசங்கள் உள்ளிட்ட சுகாதார பொருட்கள் நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயத்தை சேர்ந்த 55 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு பொது சுகாதார பரிசோதகர் சரோன் பிரைன், ஆசிரியர்களுக்கான கொவிட் -19 தொடர்பான விழிப்புணர்வினையும் வழங்கினார்.
இச் செயற்திட்டம் மலையக பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கொவிட்-19 தொற்றுக்கு பின்னரான கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி தொடர்வதற்கான ஓர் ஆதரவு அளிக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.