கிளிநொச்சி ஊற்றுப்புலம் நாவலர் பண்ணை கிராமத்தில் வசிக்கின்ற மக்கள்
கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக தற்போது ஐ றோட்
திடடத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்ற பாலத்தின் ஊடான போக்குவரத்து
துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
பாலத்தின் புனரமைப்பு காரணமாக அதற்கு மாற்று வழியாக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த வழியும் புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் உயர்ந்த
காரணத்தினால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில்
துண்டிக்கப்பட்டிருந்தது
.
இந்த நிலையில் குறித்த விடயம் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டுவரப்பட்டதனை
தொடர்ந்து நேரடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்
பணிப்பாளாருடன் நேற்று (08) விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரச
அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக குறித்த பாலத்தின் வழியாக
பொது மக்கள் போக்குவரத்து செய்ய கூடியவாறு இரவோடு இரவாக ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது
.
இதன் மூலம் குறித்த கிராம மக்கள் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுடனாக
தொடர்புகள் துண்டிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.