
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபை அமர்வு, தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.
சபை ஆரம்பித்ததும், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
விவாதங்களின் பின்னர், திட்டம் வாக்களிப்புக்கு விடப்பட்டது.
35 உறுப்பினர்கள் உள்ள சபையில், 34 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், ஒருவர் நடுநிலை வகித்தார்.
அதனால், 9 மேலதிக வாக்குகளால், கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.