022ம் ஆண்டுக்கான பாதீட்டில் ஆதன வரியை மக்களிற்கு சுமத்த வேண்டாம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான இறுதி அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் விஸ்வநாதன் நித்தியானந்தனால் குறித்த பிரேரணைஇன்று சபைக்கு கொண்டு வரப்பட்டது.
குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரேரணைக்கு ஆதரவாக சிறலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் தெரிவான பிரதேச சபை உறுப்பினர்களான விஸ்வநாதன் நித்தியானந்தன், வேலாயுதம் கயன் ஆகியோர் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தனர்.
கொவிட் நிலைமை மற்றும், பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு குறித்த ஆதனவரியை அடுத்த ஆண்டில் இணைக்க வேண்டாம் என தெரிவித்த குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறி ப்பிடத்தக்கதாகும்.