கோவிட் கட்டுப்பாட்டிற்காக அரசாங்கம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ள நிலையில் அதற்காக தொடர்ந்தும் செயற்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விசேடமாக அரசாங்கம் கோவிட் கட்டுப்பாட்டிற்காக உயர் நடவடிக்கைகளை எடுத்துள்ள சந்தர்ப்பத்தில் மக்கள் அதற்காக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
மக்கள் வழங்கும் ஆதரவிற்கமைய கோவிட் தொற்றினை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் கட்டுப்பாடுகளுக்கு மக்களின் பங்களிப்பை பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மக்கள் அதற்கு எதிர்மறையான அணுகுமுறையைக் காட்டினால், மீண்டும் அவ்வாறான சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதுவரையில் வெற்றிகரமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.