கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்குட்பட்ட கிளா
கிளிநொச்சிமாவட்ட பச்சிலைப்பள் ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளாலி கிரமத்தில் யாழ்மாவட்டத்தினும் கிளிநொச்சி மாவட்டத்தினும் எல்லைப்பகுதியி ல் சுமார் 20ஏக்கர் வயல் நிலங்களுக்குள் மழைநீர் உட்புகுந்து வயல்கள் முற்றாக நாசமடைந்துள்ளன.
குறித்த எல்லை ப்பகுதியில் ஒரு வாய்க்கால் இருப்பதாகவும் குறித்த வாய்க்காலில் கழிவு குப்பபைகள் உள்ளதனால் தேங்கி நிற்கும் நீர் கடலுக்குள் செல்ல வழியில்லாமையினாலேயே குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.வயல் நிலங்கள் மற்றும் இல்லாமல் வீதிகள்,வீடுகள் ,மற்றும் விளையாட்டு மைதானங்கள் என்பனவும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன.
2020 ஆம் ஆண்டும் இவ்வாறே வயல் நிலங்கள் பாதிப்படைந்தது எனவும் இதுவரையில் எந்தெவொரு அமைப்புக்களோ,அதிகாரி களோ,அரசியல்வாதிகளோ எவருமே தம்மை வந்து பார்வையிடவில்லை எனவும் எவ்வித நஸ்ட ஈடுகளும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த வாய்க்காலினால் தமது கிராமமே வெள்ளத்தால் ழூழ்கியுள்ளது எனவும் தெரிவித்திருந்தனர்.இதனால் தமது வாழவாதாரமும் முற்றாக பாதிப்படைந்துள்ளதெனவும் இதனை கருத்திற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைப்புகள் முன் வந்து விரைந்து நடவடிக்கை எடுத்துத்தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.