நனோ நைதரசன் சேதன திரவ உர பாவனை தொடர்பான அறிமுக விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வன்னுரிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.
பரந்தன் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், வன்னேரிக்குளம் கமக்காரர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு வன்னுரிக்குளம் முருகன் குாவில் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ஐ எப் எப் சி ஓ நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விசேட ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வு பின்னர் மண்டபத்தி இடம்பெற்றது. இதன்போது குறித்த திர உரத்தின் பயன்பாட்டு முறைகள், நன்மைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐ எப் எப் சி ஓ நிறுவனத்தின் பிரதிநிதிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.
நிகழ்வில் விவசாயிகளின் சந்தேகங்களிற்கு அவர்களால் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து குறித்த திரவ உரத்தினை பயன்படுத்தும் வகையில் உரம் விசிறுதல் மற்றும் கலக்கும் முறைகள் தொடர்பில் விவசாயிகளிற்கு செயல் முறையில் காண்பிக்கப்பட்டமையும் குறிப்பி டத்தக்கது.
ஒருவார கால விஜயம் மேற்கொண்டுள்ள குறித்த குழுவினர் அறிமுக நிகழ்வான இன்றைய முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏனைய பிரதேசங்களிற்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கள் குறிப்பிடுகின்றனர்.
ஆரம்ப நிகவழ்வான இன்றைய தினம் வடக்கு மாகாணம் தளுவிய ரீதியில் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.